Home உலகம் காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல்

காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல்

0

வடக்கு காசாவில் நடந்த போரில் இஸ்ரேலிய கேணல் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸுடனான போரில் கொல்லப்பட்ட இஸ்ரேல் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரிகளில் இவர் அடங்குகிறார்.

162வது பிரிவின் 401வது “இரும்புப் பாதைகள்” (“Iron Tracks”)படைப்பிரிவின் தளபதி கேணல் எஹ்சான் தக்சா(41)(Col. Ehsan Daxa) ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்தன.

 மிக உயர்ந்த அதிகாரி

கடந்த ஆண்டு டிசம்பரில் வடக்கு காசா சுற்றுப்புறமான ஷுஜாயாவில் இறந்த கேணல் யிட்சாக் பென் பாஷேட்டிற்குப் பிறகு காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகளில் டாக்சாவும் ஒருவர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தக்சாவை “இஸ்ரேலின் ஒரு ஹீரோ, ஒரு போர்வீரன் மற்றும் தளபதி” என்று விவரித்தார், அவர் “இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பில் முழுமையாக பங்களிப்பை மேற்கொண்டவர் என தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்

தக்சாவின் மனைவி ஹுடா மற்றும் அவரது குழந்தைகள் ஓம்ரி, ரிஃப் மற்றும் யாஸ்மின் ஆகியோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

காசாவில் “ஹமாஸுக்கு எதிரான போரில்” தக்ஸா இறந்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant)கூறினார்.

“இஸ்ரேல் அரசு இன்று ஒரு துணிச்சலான தளபதி, ஒரு துணிச்சலான அதிகாரி மற்றும் அரசின் பாதுகாப்பிற்கு தனது ஆற்றலைப் பங்களித்த ஒரு மனிதரை இழந்துவிட்டது” என்று காலண்ட் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார். 

 மேலும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழப்பு

இதேவேளை சனிக்கிழமையன்று வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையின் போது இரண்டு வீரர்கள் இறந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version