Home உலகம் கொடூர முகத்தை காண்பித்த இஸ்ரேல்…! இருளில் மூழ்கியது காசா

கொடூர முகத்தை காண்பித்த இஸ்ரேல்…! இருளில் மூழ்கியது காசா

0

காசாவுக்கான (GAZA) மின்சார விநியோகத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இஸ்ரேல் துண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உத்தரவை இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன் (eli cohen ) பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மின்சாரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் வருகையை இஸ்ரேல் துண்டித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹமாஸ் அமைப்பு இது “கேவலமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்” என குற்றம் சாட்டியுள்ளது.

உதவி பற்றாக்குறை

புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து வரும் உதவி பற்றாக்குறைக்கு மத்தியில், இந்த மின் துண்டிப்பானது உவர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காசா மக்கள் மின்னுற்பத்தி இயந்திரங்கள், சூரியசக்தித் தகடுகள் மூலம் ஓரளவு சமாளிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

கட்டாரின், டோஹாவில் போர்நிறுத்தம் மற்றும் கைதி பரிமாற்ற பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ள நிலையில்,

காசாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸை நெருக்குவதற்காக இஸ்ரேலின் (Israel) மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காசாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.  

https://www.youtube.com/embed/jd6VAXPqdRM

NO COMMENTS

Exit mobile version