ஹமாஸ் (Hamas) அமைப்பினரை ஒழிப்பதற்காக காசாவை (Gaza) சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல் (Israel) கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாமல் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல்
இந்நிலையில் நேற்று (22) தெற்கு நகரமான கான் யூனிஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களின் உடல்களை பாலஸ்தீன ரெட் கிரசண்ட் (Palestine Red Crescent ) குழுவினர் மீட்டெடுப்பதைக் காட்டும் காணொளியை எக்ஸ் தளத்தில் (X) PRCS பகிர்ந்துள்ளனர்.
🚨Palestine Red Crescent crews recovered several martyrs today from the bombing of a house in Abasan al-Kabira, east of #KhanYunis city, and transported them to Nasser Medical Hospital.
📷 Filmed by volunteer Raed Al-Sharif. pic.twitter.com/BzOJSn3XNk— PRCS (@PalestineRCS) July 22, 2024
இந்தநிலையில், தாக்குதலில் காயமடைந்த 200 மேற்பட்டவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.