அயர்ன் டோம் அமைப்பினால் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இரும்புத் துண்டு தாக்கியதில் இஸ்ரேலில் (Israel) பணியாற்றும் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர் வடக்கு இஸ்ரேலின் லெபனான் (Lebanon) எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (நிமல் பண்டார) தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர்
தலையில் காயமடைந்த நபரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
குறித்த இலங்கையரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் 71 பேர் உயிரிழப்பு
இதேவேளை, காசாவின் (Gaza) – கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸின் (Hamas) சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 289 பேர் காயமடைந்து நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவின் தலைவரான மொஹமட் டெயிப் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.