சீனாவில் (China) இருந்து புறப்பட்ட 5 போயிங் 747 சரக்கு விமானங்கள் ஈரானை அண்டிய வான்பரப்பில் திடீரென்று மறைந்த விடயம் அண்மைக் காலங்களில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துப்பெனிஸ்தான் போன்ற நாடுகளைக் கடக்கின்ற போது ராடர்களில் தென்பட்ட அந்த விமானஙகள் ஈரானின் (Iran) வான் பரப்பை எட்டுகின்ற போது ராடர்களின் கண்களில் இருந்து திடீரென்று மாயமாக மறைந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த விமானங்கள் ஈரானுக்கு தேவையான ஆயுதங்களைக் கொண்டுவந்து இறக்கியிருக்கலாம் என இராணுவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்துவதற்கு என்பதைக் கடந்து வளைகுடாவில் இருக்கின்ற அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக தான் என்று ஆய்வாளர்கள் கணிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
ஈரானை வைத்து சீனா ஆட விரும்புகின்ற விளையாட்டில் ஒரு கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தாக்குதல் தானா ஹட்டார் மீதான ஈரானின் தாக்குதல் என்றும் ஆய்வாளர்கள் தங்களது பார்வையை செலுத்துகின்றனர்.
https://www.youtube.com/embed/42QhfDmJbT8
