Home உலகம் இஸ்ரேலின் டாப் தலைகளுக்கு ஈரான் அனுப்பிய தகவல் : அச்சத்தில் திக் திக்…

இஸ்ரேலின் டாப் தலைகளுக்கு ஈரான் அனுப்பிய தகவல் : அச்சத்தில் திக் திக்…

0

இஸ்ரேல் (Israel) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஈரானியர்களிடமிருந்து மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக இஸ்ரேல் தகவல்களை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மிரட்டல் அழைப்புக்கள் நேற்றைய தினம் (18.06.2025) வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிரட்டல் அழைப்புக்கள் மாத்திரமின்றி குறுந்தகவல்களும் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தயாராக இருங்கள்

அதில் “நீங்களே உங்கள் கல்லறையைத் தோண்ட தொடங்கிவிட்டீர்கள்.. தயாராக இருங்கள்” என்று கூறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் அழைப்பு சம்பவம் இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஈரான் இஸ்ரேல் போரில் தொடர்ந்து ஈரான் (Iran) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இஸ்ரேலை விட ஈரான் கையே இதில் ஓங்கி உள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடையக்கூடும் என்ற நிலையில், அமெரிக்க ராணுவம் சுமார் மூன்று டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி உள்ளது. 

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால் அமெரிக்க (United States) தளவாடங்களை ஈரான் தாக்கும் என்று தெரிவித்துள்ளது.

https://www.youtube.com/embed/iq9lvbY2K78

NO COMMENTS

Exit mobile version