Home உலகம் முழு விசையில் இஸ்ரேலிய வான்படை: மத்திய ஈரானுக்கு விழுந்த சூடான பதிலடி

முழு விசையில் இஸ்ரேலிய வான்படை: மத்திய ஈரானுக்கு விழுந்த சூடான பதிலடி

0

மத்திய ஈரானில் ஏவுகணை சேமிப்பு மையங்கள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேலிய விமானப்படை தற்போது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் ஈரானில் இருந்து இஸ்ரேலிய எல்லையை நோக்கி ஏவப்பட்ட 15 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய விமானப்படை, போர் விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகளுடன் சேர்ந்து ஈரானிய வான் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்களில் குறித்த ட்ரோன்களை தடுத்து நிறுத்தியுள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணை

மிக தீவிரமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேற்றைய தினம் (20) ஈரான் ஏவியுள்ள நிலையில் அவை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெற்றிகரமாக தடுத்துள்ளது.

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் இரண்டாவது வாரமாக நீடித்து வருகின்றது.

தீவிர தாக்குதல்

இந்நிலையில், இரு நாடுகளும் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களில் இரு தரப்பினருக்குமே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அவற்றிற்கிடையில், நேற்றைய தினம் ஈரான் – இஸ்ரேலுக்கிடையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ட்ரோன்களும் ஏவுகணைகளும் இரு தரப்பாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version