Home உலகம் சிதறும் ஈரானிய தலைநகர்: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ஏவுகணைகள்

சிதறும் ஈரானிய தலைநகர்: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ஏவுகணைகள்

0

புதிய இணைப்பு

தெஹரான் பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை(IDF) அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானிய தலைநகரின் சில பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐடிஎஃப் சற்று முன்னர், உடனடியாக வெளியேறமாறு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

அடுத்து இலக்கு தொடர்பான வரைபடமொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை, தெஹரானில் இருந்து தெஹ்ரான் நகரின் மாவட்டம் 18-இல் உள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் அங்கிருந்து உடனடியாக வௌியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, “அனைத்து குடிமக்கள் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள பணியாளர்கள், உங்கள் பாதுகாப்பு மற்றும் உயிர் நலனை கருத்தில் கொண்டு, தெஹ்ரான் மாவட்டம் 18-இல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறவும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரடியான ஆபத்து

இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களில் தெஹ்ரான் சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டதற்கேற்ப, இந்த நடவடிக்கையும் அதே முறையில் தொடரும் எனத் தெரியவருகிறது.

இந்த நிலையில், “இந்நகர்பகுதி உங்கள் இருப்பு, உங்கள் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தும்,” என எச்சரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version