Home உலகம் இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு

0

இஸ்ரேல் 45 பலஸ்தீனர்கள் உடல்களை ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை காஸா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்நிறுத்த ஒப்பந்தம்

ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட மூன்று பிணைக்கைதிகள் உடல்களும் கடந்த 2023 இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையான பின் ஹமாஸிடமிருந்து 20 பிணைக்கைதிகள் உடல்கள் இஸ்ரேலிடம் ஒபடைக்கப்பட்டுள்ளன.

பலஸ்தீனர்கள் உடல்கள்

அத்தோடு, எட்டு உடல்கள் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் போதும் இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பலஸ்தீனர்கள் உடல்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், இதுவரை மொத்தம் 270 பலஸ்தீனர்கள் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version