Home உலகம் பலஸ்தீனத்தை தொடர்ந்து ஏமன் தலைநகர் மீது இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல்

பலஸ்தீனத்தை தொடர்ந்து ஏமன் தலைநகர் மீது இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல்

0

ஏமன் தலைநகர் சைனாவில் இஸ்ரேல் நேற்று (24.08.2025) விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல் ஏமன் ஜனாதிபதி வளாகம் அருகிலும் ஏவுகணை தளங்களிலும் நடைபெற்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹவுதி அமைப்பைச் சார்ந்த அல்-மசிரா தொலைகாட்சி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை உறுதிசெய்துள்ளது.

அரச அலுவலகம்

இந்த தாக்குதலில், ஹவுதி தரப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும், ஒரு அரசு அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹவுதிகள் கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹவுதிகள் பயன்படுத்திய ஏவுகணையில், Cluster குண்டுகள் இருந்தது என்பது இஸ்ரேலின் விமானப்படை நடத்திய ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

இது தற்போது நடைபெறும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் சூழலில் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்திய புதிய வகை ஆயுதமாகும்.

NO COMMENTS

Exit mobile version