Home உலகம் ரபா நகர் மீது படையெடுப்பு விரைவில் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

ரபா நகர் மீது படையெடுப்பு விரைவில் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

0

ஹமாஸ் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் தெற்கு காஸா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பை நடத்தும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று பேசிய பிரதமர் நெதன்யாகு,, ரஃபாவில் இஸ்ரேல் தனது அனைத்து நோக்கங்களையும் அடையும் வரை போர் தொடரும் என்று வலியுறுத்தினார்.

 இலக்கு அடையும் வரை போர் தொடரும்

“போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு முன்பு நாம் போரை நிறுத்துவோம் என்ற கேள்விக்கு இடமில்லை” என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு:பலர் பலி

 ரஃபாவிற்குள் நுழைவோம்

“நாங்கள் ரஃபாவிற்குள் நுழைவோம், மொத்த வெற்றியை அடைவதற்காக, நாங்கள் ஹமாஸ் பட்டாலியன்களை அகற்றுவோம்” என்று நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பொது போக்குவரத்து சேவையை வழங்கும் ஐரோப்பிய நாடு எது தெரியுமா…!

இதேவேளை ரபா நகரில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version