Home உலகம் தொடரும் போர் பதற்றம் : காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

தொடரும் போர் பதற்றம் : காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

0

காசாவில் (Gaza) பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸிற்கும் (Hamas) இடையே பல மாதங்களாக போர் நடந்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில், காசாவில் ஐநாவின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் நுசிராட்டில் நடத்தி வந்த பாடசாலை மீதே இஸ்ரேல் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வான்வழி தாக்குதல்

குறித்த வான்வழி தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன (Palastine) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மருத்துவமனைகள், பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது சர்வதேச போர் விதி. ஆனால், இந்த தாக்குதல் மூலம் விதியை இஸ்ரேல் மீறி உள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version