மத்திய பெய்ரூட்டில் (Beirut) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 117 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல்களில் ஒன்று ராஸ் அல்-நபா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் பாதியை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயில் மூழ்கிய கட்டடம்
இரண்டாவது தாக்குதலில், புர்ஜ் அபி ஹைதர் பகுதியில், ஒரு முழு கட்டிடமும் இடிந்து, தீயில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், கிழக்கு லெபனானில் உள்ள காரக் நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து இறந்த நான்கு பேரையும், 18 காயமடைந்தவர்களையும் மீட்டதாக லெபனான் மீட்பு அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் அறிவிப்பு
இதேவேளை, முற்றுகையிடப்பட்ட என்கிளேவ் வடக்கில் நடந்த சண்டையில் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதன் போது, , 32 வயதான மாஸ்டர் சார்ஜென்ட்கள் இருவரும் 37 வயதுடைய மேஜர் ஒருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.