Home உலகம் தொடரும் போர் பதற்றம்: காசா முனையில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

தொடரும் போர் பதற்றம்: காசா முனையில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

0

காசா (Gaza) முனையில் இஸ்ரேல் (Israel) நடத்திய திடீர் தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள், ஆளில்லா விமானம்  மூலம் ஏவுகணைகளை காசா முனையில் அல் மவாசி பகுதியில் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 90 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பிரதமர் 

ஆயுதக்குழு தளபதியான முகமது டெய்ஃப் மற்றும் இரண்டாம் நிலை தளபதி ரஃபா சலாமா கொல்லப்பட்டது குறித்து இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.

மேலும், ”இந்தப் பொய்யான கூற்றுக்கள் கொடூரமான படுகொலையின் அளவை மூடி மறைப்பதாகும்” என  ஹமாஸ் (Hamas) குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,139 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version