Home உலகம் காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: ஐநா ஊழியர்கள் 10 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: ஐநா ஊழியர்கள் 10 பேர் பலி

0

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் ஐநா ஊழியர்கள் 10பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் (Hamas) எனும் பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் தாக்குதல்

போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா (Gaza) மக்கள் கொல்லப்பட்டதடன், இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும்.

இஸ்ரேல் தாக்குதலில் ஐநா ஊழியர்களே படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா ஏஜென்சி (Unrwa) மத்திய காசாவில் பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது.

இந்த பாடசாளையின் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 6 ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version