Home உலகம் காசா போர்க்களத்தில் இஸ்ரேலின் கொடூர செயலை அம்பலப்படுத்திய இராணுவ வீரர்

காசா போர்க்களத்தில் இஸ்ரேலின் கொடூர செயலை அம்பலப்படுத்திய இராணுவ வீரர்

0

கட்டிடங்களிற்குள் வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்கான காசாவில் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்களையே பயன்படுத்துகின்றனர் என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய(israel) இராணுவவீரர் ஒருவர் காசாவில் பொதுமக்களை தாங்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

காசாவிற்கு மீண்டும் யுத்தம் வந்துள்ளது, மார்ச் 17ம் திகதி யுத்தநிறுத்தத்தை கைவிட்டது முதல் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன பகுதி மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்,ஹமாசின் இலக்குகளை தாக்குவதாக அது தெரிவிக்கின்றது.

ஐம்பதாயிரத்தை
தாண்டிய உரிழப்பு

இந்த தாக்குதல்கள் காரணமாக காசாவில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது,என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித கேடயங்களாக பாலஸ்தீனர்கள்

இஸ்ரேலின் இராணுவ தந்திரோபாயங்கள்குறித்து கேள்வி எழுப்பிய இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவருடன் சிபிஎஸ் சமீபத்தில் உரையாடியது.

டொம்மி என்பவர் (உண்மையான பெயரில்லை) தன்னை அடையாளம் காட்ட விரும்பாமல் சிபிஎஸ் உடன் பேசுவதற்கு இணங்கினார்,

காசாவிற்குள் போரிட்ட இவர், இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தியதாக தெரிவித்த சில தந்திரோபாயங்கள் கேள்வியை எழுப்பகூடியவையாக காணப்பட்டன.

‘நாங்கள் காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரித்தோம், இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்” என அவர் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்தார்.

’ நாங்கள் பாதுகாப்பிற்காக மனிதக்கேடயங்களை பயன்படுத்தினோம்”

கட்டிடங்களிற்குள் உள்ள வெடிபொருட்களை தேடுவற்கு நாய்களிற்கு பதில் பொதுமக்களை பயன்படுத்துமாறு எனக்கு பொறுப்பாயிருந்த அதிகாரி தெரிவித்தார் என டொம்மி குறிப்பிட்டார்.

‘அவர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்த அவர் கட்டிடங்கள் ஆபத்தானவையா என பார்ப்பதற்காக முதலில் அவர்களை அனுப்பினோம், கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்காக அவர்களை அனுப்பினோம் அவர்கள் அச்சத்தில் நடுங்கினார்கள்” என அவர் தெரிவித்தார்.

நாங்கள் எங்கள் தளபதியிடம் சென்று இதனை நிறுத்துமாறு கேட்டோம், ஆனால் அவர் அதனை தொடருமாறு உத்தரவிட்டார் அது தற்போது கொள்கையாகவிட்டது என டொம்மி சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/ClRY-8Z_LYw

NO COMMENTS

Exit mobile version