Home உலகம் அதிரும் மத்திய கிழக்கு : ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது ஈரான் – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அலி...

அதிரும் மத்திய கிழக்கு : ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது ஈரான் – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அலி கமேனி

0

புதிய இணைப்பு 

ஈரான் யாருடைய ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது என்று ஈரானிய உயர் மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதவில், ஈரான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. மேலும், எந்த சூழ்நிலையிலும் யாரிடமிருந்தும் எந்தத் துன்புறுத்தலையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

யாருடைய துன்புறுத்தலுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்; இதுதான் ஈரானிய தேசத்தின் தர்க்கம்” என கடுமையாக தெரிவித்துள்ளார். 

முதலாம் இணைப்பு 

இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சத்தை அடைந்துள்ள இந்த நிலையில் தற்போது ஈரான் ராணுவத்தில் மொசாட் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஈரான் மீது கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தற்போது தாக்குதல் மேற்கொண்டது.

இரு நாடுகளுக்குமிடையில் போர் பதற்றம் அதிகரித்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி அமெரிக்கா ஈரானின் அணு நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது.

அமெரிக்காவின்  தாக்குதல்

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடைபெற்றே தீரும் என்கின்ற விடயத்தை உறுதியாகத் தெரிவித்தது ஈரான்.

எங்கள் பதிலடியை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று ஈரானின் Islamic Revolutionary Guard Corps தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கட்டாரில் (Qatar) உள்ள அமெரிக்க (United States) தளங்களை நோக்கி ஈரான் (Iran) நேற்று தாக்குதல் மேற்கொண்டது.

மொசாட் உளவாளிகள்

இதன்போது ஆறு ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்த நிலையில்,அவற்றில் சிலதை இடைமறித்ததாக கட்டார் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஈரான் ராணுவத்தில் மொசாட் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் உளவுத்துறை கமேனி ஆட்சியில் பல நிலைகளில் ஊடுருவி இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிலும் கூட சில இஸ்ரேல் உளவாளிகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. 

இதன் காரணமாகவே அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பிரிவு, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கூட தெரியாத இடத்தில் கமேனியை வைத்திருக்கிறார்கள்.

1989 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் 86 வயதான கமேனி, இப்போது இந்த எலைட் சீக்ரெட் பிரிவின் 24 மணி கண்காணிப்பில் தான் இருக்கிறார். 

இது தொடர்பாகப் பிரபல பிரிட்டன் ஊடகத்திடம் பேசிய ஈரான் அதிகாரி ஒருவர், “அவர் மரண பயத்தில் பதுங்கவில்லை. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை பாதுகாக்கவே தனியாக ஒரு பிரிவு உள்ளது. அது யாருக்கும் தெரியாது. ஊடுருவலைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு” என்றார்.

NO COMMENTS

Exit mobile version