Home உலகம் நெதன்யாகு அதிரடி : போர் அமைச்சரவை கலைப்பு

நெதன்யாகு அதிரடி : போர் அமைச்சரவை கலைப்பு

0

காசா (Gaza) மீதான போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க, அமைக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சரவையை கலைப்பதாக, இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அறிவித்துள்ளார்.

ஹமாஸ் (Hamas)  அமைப்பு, மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் (07) ஆம் திகதி  தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்டோரையும் கடத்தி சென்றது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது

அமைச்சரவை

இந்த நிலையில் போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க, அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது.

 இன்று (17) அமைக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சரவையை கலைப்பதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz)அமைச்சரவையிலிருந்து வெளியேறிய நிலையில் நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார்.

காசா மீதான போருக்கு பிந்தைய திட்டம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு, போர் அமைச்சரவை அதிகாரிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version