இஸ்ரேல் (israel) வேரோடு பிடுங்கப்படும், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Sayyid Ali Hosseini Khamenei) எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் – ஈரான் (iran) இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் அயதுல்லா
கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் வகையில் பேசினார்.
பாலஸ்தீன மற்றும் லெபனான் இயக்கத்திற்கான ஈரான் ஆதரவை உறுதி செய்தார். ஈரான் நாட்டின் எதிரிகளை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நியாயப்படுத்தினார்.
இஸ்ரேலை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் என்றே குறிப்பிட்ட கமேனி, தங்கள் நாட்டு மக்களைக் காக்கத் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கான ஆதரவு தொடரும் என்ற அவர், ஈரானும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து அதன் எதிரிகளை வீழ்த்தும் எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.
ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி தெரிவித்துள்ளார்.
போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும்
எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும்.
இஸ்ரேலின் உதவியுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள வளங்களை அமெரிக்கா தன்வசப்படுத்த முயல்கிறது. இஸ்ரேலை அமெரிக்கா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதே உண்மை.
தங்கள் ஏதோ பெரிய நாடாக இந்த யூத தேசம் நினைக்கிறது. ஆனால், உண்மையில் அந்த போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும். நீண்ட காலம் தாங்காது. அது அமெரிக்கர்களின் ஆதரவினால் மட்டுமே உள்ளது” என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தலைவர்கள் கொல்லப்பட்டாலும் கூட பிராந்தியத்தில் எதிர்ப்புப் போராட்டம் பின்வாங்காது என்று கமேனி வலியுறுத்தினார்.