Home இலங்கை அரசியல் திருமலையில் சாதியத்தைக் கையிலெடுத்துள்ள தமிழரசுக்கட்சி…! சுமந்திரனால் கூட்டத்தில் குழப்பம்

திருமலையில் சாதியத்தைக் கையிலெடுத்துள்ள தமிழரசுக்கட்சி…! சுமந்திரனால் கூட்டத்தில் குழப்பம்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் (ITAK) திருகோணமலையில் (Trincomalee) சாதியத்தைக் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையின் தமிழ் தேசிய அரசியலில் மிக முக்கியமான அடையாளமாகவும் ஏனைய பகுதிகளுக்கு நிகரான பங்களிப்பை வழங்கிய பகுதியாக 10 ஆம் இலக்க பிரதேசம் இருந்திருக்கின்றது.

ஆனால் இன்று குறித்த பகுதியினை தமிழரசுக் கட்சியினர் புறக்கணிப்பு செய்வதாக அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழ் தேசிய அரசியலிலும் ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பெரும்பங்காற்றிய குறித்த பிரதேசம் இன்று தவிர்க்கப்படுகின்றது.

சாதியத்தைக் கையிலெடுத்து மிகவும் ஒரு அபத்தமான செயற்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய சிலர் கையிலெடுத்திருப்பதானது எதிரிக்கு சேவகம் செய்வது அல்லது எதிரியின் அரசியலுக்கு பட்டை தீடடும் செயற்பாடாக அமையும் என திருகோணமலையில் இருக்கக்கூடிய பொதுநலவாதிகளும் சமயத்தலைவர்களும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

திருகோணமலையில் நேற்று  இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சுமந்திரன் (M. A. Sumanthiran), சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), குகதாசன் (K. S. Kugathasan) ஆகியோர் கலந்துரையாடிய போது குழப்பம் ஏற்பட்டது. 

தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் சபைகளில் தெரிவு இடம்பெறும் போது பார்வையாளராக வருவேன் என கூறி வந்த சுமந்திரன் முடிவெடுக்க முற்பட்டபோது தான் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

அத்துடன் உள்ளூராட்சி சபைகளில் மக்களின் விருப்பங்களை நிராகரித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்தின் பேரில் சபை முதல்வர்களை நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொண்டர்களிடம் சாதிய மனநிலையைக் கிளறி விடுவதில் கட்சியின் பொறுப்புமிக்க பதவிகளில் இருக்கும் பிரமுகர்கள் மறைமுகமாக செயற்படுகின்றனர். 

இந்தநிலையில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்தே இலங்கைத் தமிழரசுக்கட்சியை அழித்து விடுவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் நேற்றைய கூட்டம் குழப்பத்தில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க…..

https://www.youtube.com/embed/8BD-Yugu3is

NO COMMENTS

Exit mobile version