Home உலகம் பிரான்ஸ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த புலம்பெயர் தமிழரின் ஓவியங்கள்

பிரான்ஸ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த புலம்பெயர் தமிழரின் ஓவியங்கள்

0

பிரான்ஸ் (France) நாட்டில் யாழ். தமிழரான வாசுகனின் ஓவியங்கள் இரண்டு வாரங்களாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

பாரிஸ் நகரில் வாசித்து வரும் வாசகனிக் கூட்டுக் குடும்பம் எனும் தலைப்பிலான குறித்த ஓவியங்கள் தற்போது தொனர்நகர சபை கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஈழத்தமிழ்பூர்வீகத்தை சேர்ந்தவர்களின் பன்முக ஆளுமைகள், புகலிட நாடுகளில் பெருமளவில் வெளிப்பட்டு வருகின்றது.

ஓவியத்திறமை 

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வாசுகனின் ஓவியத்திறமை இப்போது பிரான்ஸ் மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (16) சனிக்கிழமை வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

வாசுகனின் ஓவிய காண்பியங்கள் ஏற்கனவே ஜப்பான் சைப்ரஸ் குவடலூப் போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளது.

இதற்கும் அப்பால் பாரிஸ் நகரிலும் ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது தொனர் நகரத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற போர்காரணமான 90 களின் இறுதியில் புலம்பெயர்ந்த வாசுகன் சைப்ரஸ் நாட்டில் ஓவியகலையை கற்றவராவார்.

மேலும், அவர் பாரிஸ் வில்தனோஸ் பல்கலைக்கழகத்திலும் ஒவியக் கற்கையை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version