Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தை நிறுத்தி வாள்வெட்டு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தை நிறுத்தி வாள்வெட்டு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

0

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி சாரதியை சரமாரியாக வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவமானது, இன்று (23) மாலை நடைபெற்றதாக தெரியவருகின்றது.

வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று
கொண்டிருந்த தனியார் பேருந்தை மணியத்தோட்டம் 11வது குறுக்கு வீதியில்
நிறுத்தி, குறித்த நபரை இரண்டு மோட்டார்
சைக்கிள்களில் முகத்தை மூடிக் கொண்டு வந்தவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

வாள்வெட்டு

இச்சம்பவத்தினால் சாரதியின் கைகளில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சுமார் 05 நாட்களுக்கு முன்னர் யாழ் பேருந்து நிலையத்தில் சில யுவதிகளை
அசௌகரியப்படுத்தும் வகையில் 04 இளைஞர்கள் கிண்டல் செய்து
கொண்டிருந்தனர்.

அப்போது மேற்படி காயமடைந்த சாரதி, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு
அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி குறித்த இளைஞர்கள் சாரதியை காயப்படுத்தியுள்ளதாக காயமடைந்தவர்களின்
உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/jaffna-driver-slashed-by-masked-bikers-1727104276?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version