Home இலங்கை அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் நிலை தொடர்பில் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழ்த் தேசிய அரசியல் நிலை தொடர்பில் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை

0

வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட
முயற்சிப்பதென்பது தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் (04) வெளியிட்டுள்ள
அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் முந்தைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்ற தெரிவிற்கான பொது தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

பொது தேர்தல் 

குறித்த தேர்தலில் போட்டியிட பல்வேறு தர்ப்பில் இருந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையிலேயே, வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பது போன்ற நகர்வுகள் தமிழ்த் தேசிய இறைமை அரசியலை அடையாள அரசியலிற்குள்
சுருக்கும் முயற்சிகளாகும் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

அதேவேளை, தமிழ் தேசியத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டினையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் தேவைகளை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலைப்பாட்டினை சுட்டிக்காட்டும் வகையிலும் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version