Home முக்கியச் செய்திகள் மாமியாரை படுகொலை செய்து குழந்தைகளை பணயக் கைதிகளாக்கிய யாழ்ப்பாண பெண்

மாமியாரை படுகொலை செய்து குழந்தைகளை பணயக் கைதிகளாக்கிய யாழ்ப்பாண பெண்

0

மாமியாரை படுகொலை செய்து விட்டு பணயக் கைதிகளாக தனது குழந்தைகளை பிடித்து வைத்திருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரை கம்பளை எத்கால காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன் போது, கம்பளை உலப்பனை தோட்டத்தில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான எஸ்.ஜோதி(78) என்பவரே நேற்று இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்குச் சொந்தமான வீட்டில் 32 வயதான மருமகளும் அவரது 7 மற்றும் 4 வயதுடைய மகள்களும் மாத்திரமே இருந்ததாகவும், நேற்று நள்ளிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகொலை 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபரான பெண், திருமணத்தின் பின்னர் உலப்பனை தோட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், அவரது கணவர் வேலைக்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட தாய் சுமார் ஒரு மாத காலமாக நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், எப்போதும் தொந்தரவு செய்வதாக கூறி தனது மருமகள் மிரட்டி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட தாயின் மகன் ஒருவரும் இந்த வீட்டுன் அருகில் வசித்து வந்துள்ளதுடன் நேற்று நள்ளிரவு கேட்ட சத்தத்தையடுத்து அயலவர்களுடன் இணைந்து குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது, தனது தாய் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு கிடப்பதை கண்ட மகன் உட்பட அயலவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கைது நடவடிக்கை

இந்த நிலையில், உலப்பனை தோட்டத்தில் உள்ள குறித்த வீட்டிற்கு அதிகாலை ஒரு மணியளவில் காவல்துறையினர் சென்றுள்ளனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான பெண் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு மாமியாரை கொலை செய்த கத்தியை வைத்து குழந்தை கொலை செய்துவிடுவதாக கூறி யாரும் அருகில் வரக்கூடாது என மிரட்டியுள்ளார்.

அதையடுத்து, காவல்துறையினர், யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தேகநபரான பெண்ணின் கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவத்தை அவரது மனைவியிடம் விளக்கி அமைதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டரை மணி நேரம் கடுமையாக முயற்சியின் பின்னர் குறித்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர், குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version