Home உலகம் யாழிலிருந்து சென்ற இளம் குடும்பஸ்தர் பிரித்தானியாவில் உயிர்மாய்ப்பு

யாழிலிருந்து சென்ற இளம் குடும்பஸ்தர் பிரித்தானியாவில் உயிர்மாய்ப்பு

0

யாழ். எழுதுமட்டுவால் பகுதியைச் சேர்ந்த இளைஞன் பிரித்தானியாவில் (UK) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எழுமட்டுவால் பகுதியைச் சேர்ந்த கைலைநாதன் நிரோஜன் (வயது 37) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துயர சம்பவம் குறித்து தெரிய வருகையில், குறித்த இளைஞர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

நாட்டுக்கு செல்ல வேண்டும் 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கோடி 50 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவு செய்து முகவர் ஊடாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.

திரும்பி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலையில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு கூறி
வந்ததாக கூறப்படுகின்றது

இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வசித்து வந்த வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version