Home உலகம் வெளிநாடொன்றில் பற்றியெரிந்த ஏழு மாடி கட்டிடம்: பலியான உயிர்கள்

வெளிநாடொன்றில் பற்றியெரிந்த ஏழு மாடி கட்டிடம்: பலியான உயிர்கள்

0

இந்தோனேஷியாவில் ஏழு மாடி அலுவலக கட்டிடமொன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

தலைநகர் ஜகர்தாவில் உள்ள கட்டிடம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி கர்ப்பிணி உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகள் 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 29 வாகனங்களில் விரைந்து செயற்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கட்டடத்திற்குள் சிக்கியிருந்தவர்களை வானுயர ஏணியை பயன்படுத்தி அவர்கள் மீட்டுள்ளனர்.

இருப்பினும், மூச்சுத்திணறல் மற்றும் தீயில் கருகி ஏழு ஆண்கள், 15 பெண்கள் மற்றும் கர்ப்பிணி உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version