Home முக்கியச் செய்திகள் சீனா பூட்டான் இடையே தோன்றிய ஜெட் மின்னல் : நாசா வெளியிட்ட புகைப்படம்

சீனா பூட்டான் இடையே தோன்றிய ஜெட் மின்னல் : நாசா வெளியிட்ட புகைப்படம்

0

தற்போதைய காலநிலை மாற்றத்தால் காதை பிளக்கும் இடியும் கண்ணைப்பறிக்கும் மின்னலும் தோன்றி மக்களை அச்சுறுத்துகின்றது.

இதனால்தான் வளிமண்டலவியல் திணைக்களமும் காலநிலை மாற்றத்தின்போது ஏற்படும் இடி மின்னலுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றது.

அந்தவகையில் அண்மைக் காலமாகவே அதீத சக்திவாய்ந்த மின்னல் ஒன்று பூமியை தாக்கி வருகிறது. அதற்கு விஞ்ஞானிகள் ஜெட் மின்னல் என்று பெயரிட்டுள்ளனர்.

விமான பயணியால் பிடிக்கப்பட்ட படம்

இந்த ஜெட் மின்னலை சில ஆண்டுகளுக்கு முன்பு முனிச் பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது விமான பயணி ஒருவர் படம்பிடித்திருக்கிறார்.

 அதே போல சமீபத்தில் சீனாவிற்கும் பூட்டானுக்கும் இடையில் உள்ள இமயமலைகளின் மீது இத்தகைய மின்னல் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அப்படி தோன்றிய படத்தை தற்பொழுது நாசா வெளியிட்டுள்ளது.

நாசா வெளியிட்ட புகைப்படம்

அந்தப் படத்தின்படி ஐந்து மின்னல்கள், மேகத்தின் உச்சியில் தோன்றி மலையை இணைக்கும்படி செங்குத்தாக விழுந்திருக்கும். இத்தகைய ஜெட் மின்னல்கள் சாதாரண மின்னல்களை விட 50 மடங்கு சக்தி கொண்டவை என்று சொல்லப்படுகிறது.

இவை தோன்றும்பொழுது சிவப்பு, ஒரேஞ்ச் ஒளியை வெளியிடுகின்றன.

இந்த ராட்சத ஜெட் மின்னல்களின் சரியான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்து இதைப்பற்றிய ஆராய்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூமியின் வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளுக்கு இடையில் மின் ஆற்றலை சமநிலைப்படுத்துவதில் இந்த ஜெட் மின்னல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version