Home உலகம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்: பைடனின் திடீர் முடிவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்: பைடனின் திடீர் முடிவு

0

தற்போதைய அமெரிக்க(USA) ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) அமெரிக்க தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடக்க உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump)(78), வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்,(81) போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, சிகாகோவில் அடுத்த மாதம், 19-22ல் நடக்கும் கட்சியின் மாநாட்டில் அவர் முறைப்படி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என,தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவாத நிகழ்ச்சி

இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான நேரடி விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் கலந்துக்கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்பின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஜோ பைடன் தடுமாறியதுடன் தூங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என,பலரும் பேசத்தொடங்கினர்.

ஜோ பைடன் விலகல்

இந்நிலையில், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து, ஜோ பைடன் விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன். எஞ்சியிருக்கும் என் பதவி காலம் முழுவதும், அதிபராக எனது கடமையை நிறைவேற்றுவேன்.இதுவே என் கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version