Home இலங்கை அரசியல் அநுரவுடன் நேரடி மோதலுக்கு தயாராகும் இளஞ்செழியன் !

அநுரவுடன் நேரடி மோதலுக்கு தயாராகும் இளஞ்செழியன் !

0

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முதலமைச்சர் வேட்பாளராக வருவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு,தேசிய மக்கள் சக்தியை யாழ்.மாவட்டத்திலே தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றால் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்தேசியம் தொடர்பான சிந்தனையில் விக்னேஸ்வரனை விட  இளஞ்செழியன் அக்கறையுடன் செயற்படுகின்றார் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,வாக்கை சிதறடிக்காமல் அனைத்துதரப்பினரும் ஒருமித்து கலந்துரையாடி சிறந்த முதலமைச்சர் ஒருவரை தெரிவு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version