Home உலகம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவமனை உயர் அதிகாரி கைது

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவமனை உயர் அதிகாரி கைது

0

கொல்கத்தாவிலுள்ள (Kolkata) மருத்துவமனையில் பெண் மருத்துவர் தவறானமுறைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலரை சி.பி.ஐ கைது செய்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மற்றும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சிலரையே இன்று(14) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9ஆம் திகதி பயிற்சி பெண் மருத்துவர் தவறானமுறைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

[0K6PYGL[

சி.பி.ஐ விசாரணை

இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கொலை வழக்கு

இதனால் சந்தீப் கோஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் உட்பட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கொலை வழக்கில் மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

இவர்கள்மீது ஆதாரங்களை அழித்தல், மோசடி ஆவணங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version