Home இலங்கை அரசியல் திருகோணமலை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குகதாசன் அளித்துள்ள வாக்குறுதி

திருகோணமலை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குகதாசன் அளித்துள்ள வாக்குறுதி

0

Courtesy: H A Roshan

மக்கள் பிரச்சினைகளை பிரதேச வேறுபாடின்றி தீர்க்க என்னாலான சகல உதவிகளையும் செய்வேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (16.08.2024) புல்மோட்டை சமூக நலன்புரி அமைப்பினை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இச்சந்திப்பில் புல்மோட்டைப் பிரதேசத்தில் புரையோடிப் போயிருக்கும் சுகாதாரம், கல்வி மற்றும் காணி விடயங்களில் நீண்டகாலமாக காணப்படுகின்ற பல தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

விரிவான கலந்துரையாடல்

குறிப்பாக புல்மோட்டை தள வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Source: https://tamilwin.com/article/kugadasan-s-on-the-problems-of-trincomalee-people-1723855717

NO COMMENTS

Exit mobile version