குருந்தூர் மலை பகுதியில் சுற்றியுள்ள வயல் நிலங்களானது தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படுவதாக கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் பூர்வீக இடமாக காணப்படுகின்ற குமுழமுனை தண்ணி முறிப்பு குருந்தூர் மலை பகுதியில் இருந்த ஆதி சிவன் ஐயனார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டதன் பின்னணியில் அதனை சூழ உள்ள வயல் நிலங்களையும் தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறிப்பாக நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறியும் குருந்தூர் மலைப்பகுதியிலே விகாரை அமைக்கும் பணிகள் முற்றும் முழுதாக நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு தடைகளை மீறியும் தமிழ் மக்களினுடைய பூர்வீக வயல் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்கின்ற தொல்பொருள் திணைக்களத்தினுடைய செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
