Home உலகம் சீனாவில் இடம்பெற்ற அனர்த்தம் : பலர் மாயம்

சீனாவில் இடம்பெற்ற அனர்த்தம் : பலர் மாயம்

0

சீனாவில் (china)இன்று(08) சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 போ் காணாமற்போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில்,

தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள மலை கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 வீடுகள் புதையுண்டன.

30 பேரைக் காணவில்லை

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். இது தவிர, அந்தப் பகுதியில் வசிக்கும் சுமாா் 200 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

இந்த நிலச்சரிவில் சிக்கிய சுமாா் 30 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்கும் பணியில் அனர்த்தகால துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவித்தனா்.

சீன ஜனாதிபதி உத்தரவு

இந்த நிலச்சரிவுக்கான காரணம், இதனால் ஏற்பட்டுள்ள நிலவியல் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்(xi jinping) உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version