Home உலகம் சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள மூவர்: மீட்பு பணிகள் தீவிரம்

சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள மூவர்: மீட்பு பணிகள் தீவிரம்

0

சுவிட்சர்லாந்தின் (Switzerland) தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலச்சரிவு ஆல்ப்ஸ் (Alps) மலைத்தொடரின் மிசோக்ஸ் பள்ளத்தாக்கில் நேற்று (22) ஏற்பட்டுள்ளது.

இதன்போது, நிலச்சரிவில் சிக்கி பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மீட்பு நடவடிக்கை

இந்தநிலையில் காணாமல் போனோரை மீட்கும் நடவடிக்கையினை மீட்புக்குழுவினர் அகழ்வாராய்ச்சி கருவிகளையும், சிறப்பாகப் பயிற்சி பெற்ற தேடுதல் நாய்களையும் கொண்டு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் சுவிஸ் காவல்துறை அதிகாரி வில்லியம் குளோட்டர், காணாமல் போன மூன்று பேரையும் உயிருடன் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கை இருப்பதாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், லோஸ்டல்லோ(Lostallo) நகராட்சியில் உள்ள வீடுகளை பாறை சரிவு தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version