Home முக்கியச் செய்திகள் வேலைக்காக வெளிநாடொன்றுக்கு பறந்துள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

வேலைக்காக வெளிநாடொன்றுக்கு பறந்துள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

0

இந்த ஆண்டு 2,927 இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் 100 இளம் பெண்களும் அடங்குவதாக பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உற்பத்தித் துறையில் 2,197 இலங்கையர்களும், மீன்பிடித் துறையில் 680 பேரும், கட்டுமானத் துறையில் 23 பேரும், விவசாயத் துறையில் இரண்டு பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

வேலை வாய்ப்பு

இதற்கிடையில், தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற கிட்டத்தட்ட 200 இலங்கையர்களை இந்த மாத இறுதிக்குள் தென் கொரியாவிற்கு அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், இந்த மாத இறுதிக்குள் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தென் கொரிய வேலைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2025 கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சைக்கு 36,475 வேட்பாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும், பரீ்ட்சை 23 ஆம் திகதி தொடங்க உள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version