பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை நியூயோர்க்கை (New York) சேர்ந்த நிறுவனமொன்று ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.
குறித்த கல்லினை இந்திய மதிப்பில் 1.7 கோடி ரூபாய் ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விண்கல் ஆய்வாளர்களால் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் விண்கல் ஒன்று கடந்த 2023 நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிய டைனோசரின் என்புக் கூட்டு
இதன் மேற்பகுதி, கண்ணாடி போன்று பளபளப்பாகக் காணப்படுகின்றது. 25 கிலோ எடையிலான இந்த கல், பூமியில் இருக்கும் செவ்வாய் கிரக கற்களில் மிகப்பெரியது.
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது, அதிக வெப்பத்தால் எரிந்து இவ்வாறு உருமாறியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை செவ்வாய் கிரக கல்லுடன் சேர்த்து நியூயோர்க்கின் ஏல நிறுவனம், சிறிய டைனோசரின் என்புக் கூட்டையும் ஏலத்தில் விடவுள்ளது.
குறித்த என்புக் கூடு அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்தில் 1996 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
