Home உலகம் ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : ட்ரம்பின் அதிரடி உத்தரவு

ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : ட்ரம்பின் அதிரடி உத்தரவு

0

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பரிந்துரையின்படி 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

ஜனாதிபதி ட்ரம்ப் 

இந்நிலையில், அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது 9,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்துறை, எரிசக்தி, பணி ஓய்வு பெற்றோர் விவகாரங்கள் துறை, வேளாண் துறை, சுகாதாரத் துறை, சேவைகள் துறை எனப் பல்வேறு துறைகளிலும் இந்த ஆட்குறைப்பு நடந்துள்ளது.

பதவி விலகல் 

முன்னதாக செயல்திறன் அற்ற துறைகளாக அறியப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து பதவி விலகல் செய்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்ததாகவும் அதற்கு ஆயிரக்கணக்கானோர் இசைவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பதவி விலகல் செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version