Home உலகம் உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

0

லெபனானில் (Lebanon) இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு போரை தீவிரப்படுத்துவதனால் உடனே போரை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்ரேல் (Israel), தற்போதுவரை பலஸ்தீனத்தை (Palestine) ஆக்கிரமித்து வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ் (Hamas) அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.

பலஸ்தீன மக்கள் 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஹமாஸ் மீதும் பலஸ்தீனம் மீதும் போரை அறிவித்தது. இந்த போரில் இதுவரை 45,000க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் மீதும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக லெபனானில் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா எனும் அமைப்பாணது இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் போன்று இது சிறிய குழு கிடையாது, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் மிகப்பெரிய குழுவாக ஹிஸ்புல்லா அமைப்பு காணப்படுகிறது.

அலி லாரிஜானி

இந்நிலையில் நேற்றையதினம் (15.11.2024) ஈரான் தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) ஆலோசகரான அலி லாரிஜானி (Ali Larijani) பெய்ரூட்டிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அவரை வரவேற்றிருந்த லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி (Najib Mikati), போர் நிறுத்தம் குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது ஐநா தீர்மானம் 1701ஐ மேற்கோள் காட்டி, போர் நிறுத்தம் குறித்த பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார்.

ஹிஸ்புல்லா 

இந்த தீர்மானத்தின்படி, தெற்கு லெபனானில் லெபனான் இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. 

அதாவது ஹிஸ்புல்லா இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை.

எனவே, தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான் அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version