Home உலகம் கனடாவில் மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

கனடாவின் (Canada) மொன்றியால் (Montreal) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம், இடிமுழக்கம் தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான வெப்பநிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  இன்றைய தினம் (20) கடும் மழையுடன் இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடி மின்னல் தாக்கம் 

இதனையடுத்து, மொன்றியால், லாவல், வாடுரில் (In Vader) , வெலிபீல்ட் (Velifield) மற்றும் தென்கியூபெக் (Southern Quebec) ஆகிய பகுதிகளிலும் இடி மின்னல் தாக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இடி மின்னல் தாக்கங்களின் போது பலத்த காற்று வீசும் எனவும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில இடங்களில் திடீரென வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version