ரஷ்யாவின்(russia) பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா, அமூர் ஆகிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன்(ukraine) ராணுவம் கடந்த 02 ஆம் திகதி ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 40 ற்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை பாரவூர்தியில் ஏற்றிச் செல்வதைக் காட்டும் காணொளியை உக்ரைன் படைத்தரப்பு வெளியிட்டுள்ளது.
பாரவூர்தியில் கொண்டு செல்லப்படும் ட்ரோன்கள்
இந்த தாக்குதலுக்கு ஒபரேஷன் பவுட்டினா (“சிலந்தி வலை”) என உக்ரைன் பெயர் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Джерела в СБУ надали унікальні кадри підготовки до спецоперації “Павутина” pic.twitter.com/dSZLOP9GZB
— Українська правда ✌️ (@ukrpravda_news) June 4, 2025
ட்ரோன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்திகள் ரஷ்ய விமானப்படைத்தளங்களுக்கு அருகில் சென்றதும் பறப்பை மேற்கொண்டதாக ரஷ்ய படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு எப்பிவி ட்ரோனை தயாரிக்க ரூ.40,000 மட்டுமே செலவாகும். இந்த ட்ரோன்கள் மூலம் ரூ.4,000 கோடி மதிப்புள்ள அதிநவீன போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. உக்ரைன் ,ராணுவம் 117 ட்ரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது. இவை தற்கொலை ட்ரோன்கள் ஆகும்.
