Home உலகம் பாகிஸ்தானில் டேங்கர் லாரி வெடித்து விபத்து : ஆறு பேர் பலி

பாகிஸ்தானில் டேங்கர் லாரி வெடித்து விபத்து : ஆறு பேர் பலி

0

பாகிஸ்தானில் (Pakistan) எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருயைில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version