உலகில் முதல் 10 இடங்கள் எப்போதும் பேசுபொருளாகுகின்றது.
அந்தவகையில், உலகில் உள்ள மிகவும் அழகான 10 விமான நிலையங்கள் எவையென பார்க்கலாம்.
முதலிடத்தில் டோக்கியோ-ஹனேடா (Tokyo haneda airport) என்று அழைக்கப்படும், விமான நிலையம் உள்ளது.
இந்த விமான நிலையம் கிரேட்டர் டோக்கியோ பகுதியில் காணப்படுகின்றது.
அதன் பின்புலமாக தெரியும் மலையும் அதன் சூழலும் மிக அழகாக காணப்படுவதோடு விமான நிலையத்திற்கும் அழகு சேர்கின்றது.
இரண்டாம் இடம்
இரண்டாம் இடத்தை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் (Singapore Changi Airport) பிடித்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இந்த விமான நிலையம் விளங்குகின்றது.
100க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இங்கிருந்து தங்களின் விமானத்தை இயக்கிவருகின்றன.
மூன்றாம் இடம்
மூன்றாம் இடத்தை மூன்றாவது கிங் அப்துல் அஜிஸ் விமான நிலையம்(king-abdul-aziz-international-airport) பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவில் இருக்கும் இந்த விமான நிலையத்தை ஜெட்டா விமான நிலையம் என்றும் கூறுவார்கள்.
மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பரபரப்பான இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நான்காம் இடம்
நான்காம் இடத்தை ஜப்பானில் இருக்கும் கன்சாய் சர்வதேச விமான நிலையம் (Kansai International Airport) பெற்றுள்ளது.
இது கிரேட்டர் ஒசாகா பகுதியில் உள்ளது.
இந்த விமான நிலையத்திற்கு அருகில் ஒசாகா, கியோட்டோ, கோபி என்ற நகரங்கள் உள்ளன.
இது ஒசாகா விரிகுடாவின் நடுவில் உள்ள ஒரு செயற்கை தீவில் அமைந்துள்ளதால் இந்த இடம் மேலும் அழகாக காணப்டுகின்றது.
ஐந்தாவது இடம்
ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் (Hong Kong International Airport)உள்ளது.
இது மேற்கு ஹாங்காங்கில் உள்ள செக் லேப் கோக் தீவில் உள்ளது.
இதைச் சுற்றியும் தீவுபோல் கடல்நீர் சூழ்ந்துள்ளதால், எப்போதும் இயற்கை அழகுடன் மிளிர்கின்றது.
ஆறாவது இடம்
ஆறாவது இடத்தில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் உள்ளது.இது அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் உள்ளது.
இதன் மொத்த நிலப்பரப்பு 4,700 ஏக்கராக காணப்படுதோடு ஐந்து ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.
ஏழாவது இடம்
ஏழாவது இடத்தில் ஹமாத் சர்வதேச விமான நிலையம் (Hamad International Airport) பெற்றுள்ளது.
இது மத்திய கிழக்கின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக இந்த விமானம் கத்தாரில் உள்ளது.
எட்டாவது இடம்
எட்டாவது இடத்தில் வெலிங்டன் விமான நிலையம் (wellington airport) உள்ளது.
இது நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள ரோங்கோட்டையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு இப்போதும் கழுகுகள் மற்றும் Gandalf சுற்றித் திரிகின்றன.
இங்கு ஏர் நியூசிலாந்து, சவுண்ட்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்களின் விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதைச் சிறிய விமான வணிகங்களின் தாயகம் என்கின்றனர்.
ஒன்பதாவது இடம்
ஒன்பதாவது இடத்தில் டென்வர் சர்வதேச விமான (Denver airport)நிலையம் உள்ளது.
இது மேற்கு அமெரிக்காவில் உள்ளது.
கொலராடோவின் பெருநகரமான டென்வருக்கு இங்கிருந்து பிரதான சேவை தொடங்குகிறது.
மொத்தம் 33,531 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கிங் ஃபஹத் நிலையத்திற்கு அடுத்து உலகில் உள்ள இரண்டாவது பெரிய விமான நிலையம் இதுதான்.
பத்தாவது இடம்
பத்தாவது இடத்தில் பிரான்சில் உள்ள கோர்செவெல் அல்டிபோர்ட் நிலையம் (Courchevel Altiport) உள்ளது.
இங்கு தென்படும் ஆல்பைன் இயற்கைக்காட்சி காண்பவர்களை பிரமிக்க வைக்கும்.
குறுகிய ஓடுபாதைகளைக் கொண்ட ஆல்ப்ஸின் அழகிய காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.