Home உலகம் கலைக்கப்பட்ட பிரான்ஸ் நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

கலைக்கப்பட்ட பிரான்ஸ் நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

0

பிரான்ஸ் (France) அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டு (Emmanuel Macron) நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்

பரிஸ் (Paris) ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (09) இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தீவிர வலதுசாரிகளால் அவரது கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, இம்மானுவேல் மக்ரோன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் ஆதரவாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பெற்ற வெற்றியால் உற்சாகமடைந்து, பிரான்சின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கண்டறியப்பட்ட கொடிய பக்டீரியா தொற்று

உக்ரைனின் தாக்குதலால் கதிகலங்கிய ரஷ்யாவின் அதி நவீன எஸ்யு-57 போர் விமானம்

டென்மார்க் பிரதமர் தாக்கப்பட்ட விவகாரம்:வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

Exit mobile version