Home உலகம் வனுவாட்டு தீவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வனுவாட்டு தீவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

பசிபிக் பெருங்கடலின் (Pacific Ocean) தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் (Vanuatu) வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது நேற்று (24) இரவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஓல்ரி துறைமுகத்தில் இருந்து 51 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 156.7 மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

சுனாமி எச்சரிக்கை

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தீவு முழுவதும் அதிர்ந்ததுள்ளது சுனாமி ஏற்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில்  எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிலநடுக்கத்தால்  ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் தகவல்  எதுவும் வெளியாகவில்லை.

பசிபிக் தீவு நாடுகளான பிஜி (Fiji) , டோங்கா (Tonga) மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகள், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version