Home இலங்கை அரசியல் பழைய நண்பரான சீன ஜனாதிபதியை சந்தித்த மகிந்த ராஜபக்ச

பழைய நண்பரான சீன ஜனாதிபதியை சந்தித்த மகிந்த ராஜபக்ச

0

Courtesy: Sivaa Mayuri

அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வின்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa)  சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை( Xi Jinping) இன்று பீஜிங்கில் சந்தித்தார்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சீன ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்சவும் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

கூட்டுறவு உலகம்

இந்த சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ச எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமது பழைய நண்பரான ஸி ஜின்பிங்கை ( Xi Jinping) சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், அமைதியான மற்றும் கூட்டுறவு உலகத்தை உருவாக்க நாடுகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ ( Wang Yi )விடுத்த அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பீய்ஜிங்கிற்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, அங்கு தங்கியிருந்த போது சீன முன்னணி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version