Home உலகம் மாலைதீவில் நாடாளுமன்ற தேர்தல் : வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

மாலைதீவில் நாடாளுமன்ற தேர்தல் : வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

0

மாலைதீவின் 20 ஆவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று(21) தேர்தல் நடைபெறுகிறது.

குறித்த தேர்தலானது மார்ச் 17 ஆம் திகதி நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் தேர்தல் திகதி மாற்றம் செய்யப்பட்டது.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 28 ஆம் திகதி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் : இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

உறவில் விரிசல் 

இந்த மசோதாவுக்கு அதிபர் முகமது முய்சு(Mohamed Muizzu) ஒப்புதல் அளித்த பின்னர் தேர்தல் திகதி ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி இன்று(21) காலையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுவதுடன் 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

முகமது முய்சுவின் செயல்பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தலையீடு : தணியுமா ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்…!

அதிபர் தேர்தல்

கடந்த ஆண்டு(2023) நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்துடன் வெற்றி பெற்றார்.

சீனாவின் ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியதிலிருந்து மாலைதீவு “புவிசார் அரசியல் ஹொட்ஸ்பாட்” ஆக மாறியுள்ளது.

எனவே முகமது முய்சுவிற்கு இந்த தேர்தல் கடும் போட்டியாக இருப்பதுடன்  முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்ளிட்ட 368 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இதில் 130 பேர் சுயேட்சைகளாக இருப்பதுடன் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மே மாதம் பதவியேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அது இஸ்ரேலின் தாக்குதல் அல்ல: அடுத்த கட்டத்திற்கு நகரும் போர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version