அமெரிக்காவில் மான்ஹட்டன் நீதிமன்றத்திற்கு(Manhattan Court) வெளியே நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல்(Stormy Daniels) டொனால்ட் டிரம்ப்பிற்கு(Donald Trump) எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டிரம்ப் அவருக்கு பணம் வழங்கினாரா என்பது தொடர்பான வழக்கானது மான்ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நீதிமன்றத்திற்கு வெளியிலேயே குறித்த நபர் தீக்குளித்துள்ளார்.
ரொறன்ரோவில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
சதிமுயற்சி
சில சதிமுயற்சி தொடர்பான துண்டுபிரசுரங்களை எறிந்த பின்னர் அவர் தன் மீது திரவமொன்றை ஊற்றிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் நீதிமன்றின் பாதுகாப்பு மீறப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சில வாரங்களிற்கு முன்னர் புளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து நியுயோக்கிற்கு வந்த மக்ஸ்வெல் அசரெலொ(Maxwell Azzarello) என்ற 37 வயது நபரே இவ்வாறு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
ஈரானிய அதிபரின் வருகை: சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை
தீக்குளித்த நபர்
அத்தோடு தீக்குளித்த நபர்மீது இதுவரையில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவுமில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் தொடர்பான வழக்கு காரணமாக அப்பகுதியில் பெருமளவு காவல்துறையினர் காணப்பட்டுள்ளனர்.
எனவே குறித்த நபர் தீக்குளித்ததும் காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்த நிலையில் தீக்குளித்த நபர் கடும் எரிகாயங்களுடன் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீக்குளித்த நபரின் நிலைமை ஆபத்தானதாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |