Home உலகம் ஜேர்மனிலும் மாம்பழத்திருவிழா: இலட்சக்கணக்கில் விலைபோன மாம்பழம்

ஜேர்மனிலும் மாம்பழத்திருவிழா: இலட்சக்கணக்கில் விலைபோன மாம்பழம்

0

ஜெர்மனிய ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவின் முடிவில், மாம்பழமொன்று ஏலத்தில் விடப்பட்ட நிலையில் இம்மாம்பழமானது 1050 யூரோக்களுக்கு (இலங்கை மதிப்பு –  343,504 ரூபாய்) விற்பனையாகியுள்ளது.

இதேபோன்று சமீபத்தில் வவுனியாவில் உள்ள உக்குலாங்குளம் பிள்ளையார் கோவிலில் இதேபோன்ற மாம்பழ ஏலத்தில் 162,000 ரூபாய்க்கு (500 யூரோ) விற்பனையாகியது.

மாம்பழத்தின் இறுதி விலை

அதேவேளை, இதே பகுதியிலுள்ள மற்றொரு கோவிலில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ஒரு மாம்பழம் 95,000 ரூபாய் (300 யூரோ) விலைக்கு விற்கப்பட்டது.

அதே வகையில், ஜேர்மனி, கும்மெர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிகுமாரன் கோவிலில் நடந்த ஏலத்தில் தொடக்க விலை 25 யூரோவாக இருந்தது, இறுதியில் மாம்பழம் 1050 யூரோ விலைக்கு விற்கப்பட்டது.

புலம்பெயர் மக்களின் பங்களிப்பு 

இந்த முழு வருமானமும் கோவிலின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவில் மற்றும் சமூக நற்பணிகளுக்கும் நிதி திரட்டும் முகமாக இவ்வகையான ஏலங்கள் இலங்கையின் வட மாகாணத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன, இப்படியான ஏலங்களுக்கு கிராமவாசிகளும், புலம்பெயர் மக்களும் பெரும் அளவில் தொடர்ச்சியாக பங்களிக்கின்றனர்.

 

https://www.youtube.com/embed/Tp_c-Hw3S6M

NO COMMENTS

Exit mobile version