Home உலகம் வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூடு – அலறி அடித்து ஓடும் காட்சிகள்: 12 பேர் பலி

வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூடு – அலறி அடித்து ஓடும் காட்சிகள்: 12 பேர் பலி

0

மெக்சிகோவின் (Mexico) நடைபெற்ற கிறிஸ்தவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம்

துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, ​​புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிகளுடன் கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

NO COMMENTS

Exit mobile version