சீன (China) வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் (Wang Yi), இந்திய (India) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் (Jaishankar) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று (04) கஜகஸ்தானில் (Kazakhstan) இடம்பெற்றுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
எல்லை பிரச்னை
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி-யை, அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் இந்தியா-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போது, இருவரும் எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், புகைப்படமும் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மோடியின் ரஷ்ய பயணம்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பங்கேற்க இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், மோடியின் ரஷ்ய (Russia) பயணம் காரணமாக ஜெய்சங்கர் இதில் பங்கேற்றிருக்கிறார்.
இந்த சந்திப்பு இரு நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.